மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க பொதுத்தேர்வு முடிவு

மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றோர் முன்னிலையில் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க பொதுத்தேர்வு முடிவு

மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றோர் முன்னிலையில் பள்ளிக்கூடத்தில் வைத்து வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தற்கொலை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள், இணையதளங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள், டி.வி.சேனல்கள் மூலமாகவும் வெளியிடப்படுகின்றன.

இந்த வகையில் வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் தங்களது தேர்ச்சி குறித்து தெரிந்துகொள்கின்றனர்.

அப்போது, தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காகவும், தோல்வி அடைந்ததற்காகவும் மாணவர்களில் சிலர், தற்கொலை செய்துகொள்கின்றனர்.

எனவே, இதுபோன்ற உயிர் இழப்பை தடுப்பதற்காக, தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மாற்றம் செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.

தடுக்க முடியும் அதில், ‘ஊடகங்கள், இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பதில், மாணவர்களை, பெற்றோருடன் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களிடம் தேர்வு முடிவுகளை தெரிவிக்க வேண்டும்.

இதன்மூலம் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க முடியும். பெற்றோரும், தங்களது பிள்ளைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள முடியும்’ என்று கூறியிருந்தேன். இது மட்டுமல்லாமல், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பு, மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

பரிசீலிக்க வேண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கொடுத்த இந்த கோரிக்கை மனுவை, தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

மாணவர்களையும், அவஹீர்களது பெற்றோரையும் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைத்து பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.