7வது மத்திய ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம்

7வது மத்திய ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்?: விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

7வது மத்திய ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம்

புதுடெல்லி : அரசு உதவி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பள குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் காட்டப்படும் தாமதத்துக்கு விளக்கம் அளிக்க கோரி டெல்லி கல்வி இயக்குநரகத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமல்செயயப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கும் இதன் அடிப்படையில் ஊதியம ்தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி நிதி உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘‘அரசு பள்ளிகளும், நிதி உதவி பெறும் பள்ளிகளும் அரசிடம் இருந்து ஊதிய உயர்வு, அலவன்சுகளுக்கான கூடுதல் நிதி தேவையை அரசு கொடுக்கிறது.

ஆனால், சுயசார்பு தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை நம்பியே உள்ளன என அதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கமல் குப்தா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சுனில் கவுர் முன்பாக வந்தது. அப்போது, டெல்லி அரசின் ஏப்ரல் 13ம் தேதி உத்தரவு ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான கால தாமதத்துக்கு வழி வகுக்கிறது.

இதனால் ஊதிய உயர்வு கிடைக்காத ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தாவும் நிலை உருவாகி உள்ளது என கமல் குப்தா கூறினார்.

டெல்லி அரசின் வழக்கறிஞர் ரமேஷ் சிங் கூறுகையில், இந்த வழக்கில் எந்த பள்ளியும் இணையவில்லை.

எப்படி தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாட முடியும் என கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகள் 7வது சம்பள குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் ஊதியம் தர வேண்டும்.

இதில் மாற்று கருத்து இல்லை என்றார். மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, பள்ளி கல்வி இயக்குநரகம், துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆனால், 7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பல பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கும் ஏப்ரல் 2018ம் ஆண்டு அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.