மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Production பிரிவில் Junior Engineering Assistant – IV பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Junior Engineering Assistant – IV (Production) பணிகளுக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
JEA வயது வரம்பு :
31.01.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
IOCL கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemical / Refinery & Petrochemical Engineering பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி அல்லது Maths, Physics, Chemistry அல்லது Industrial Chemistry பாடப்பிரிவுகளில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Operation (rotating shift) of Pump House , Fired Heater, Compressor, Distillation Column, Reactor, Heat exchanger etc. in a Petroleum Refinery/ Petrochemicals / Fertilizer/ Heavy Chemical/ Gas Processing Industry போன்ற பணிகளில் ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
IOCL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Written Test and a Skill / Proficiency / Physical Test (SPPT) என இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
IOCL JEA விண்ணப்பக் கட்டணம் :
General, EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.150/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 19.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்து முடித்த பின் அந்த படிவத்தின் நகரினை 27.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.