டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள் தேசிய அனல்மின் நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 446 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய அனல் மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார நிறுவனமான இது நாட்டின் 25 சதவீத மின் தேவையை தீர்த்து வைக்கும் நிறுவனமாக விளங்குகிறது.
53 ஆயிரத்து 651 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 2032-ம் ஆண்டுக்குள் 130 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் இலக்கை நோக்கி திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களிலும் டிப்ளமோ டிரெயினி மற்றும் எக்சிகியூட்டிவ் டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ டிரெயினி பணிக்கு மேற்கு மண்டலத்தில் 174 இடங்களும், கிழக்கு மண்டலத்தில் 83 பணியிடங்களும், தெற்கு மண்டலத்தில் 25 இடங்களும் உள்ளன.
இது தவிர அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு 164 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்… டிப்ளமோ டிரெயினி பணியிடங் களுக்கு விண்ணப்பிப்பவர்கள், 9-5-2018-ந் தேதியில் 25 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், சி அண்ட் ஐ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
இவை சார்ந்த என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
டிப்ளமோ டிரெயினி பணிகளுக்கு 9-5-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
164 அதிகாரி பணியிடங்கள் மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் அதிகாரி தரத்திலான 164 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
எக்சி கியூட்டிவ் டிரெயினி (நிதி) பணிக்கு 47 இடங்களும், அசிஸ்டன்ட் கெமிஸ்ட் பணிக்கு 20 இடங்களும், மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 35 இடங்களும், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 15 இடங்களும், அசோசியேட் பணிக்கு 47 இடங்களும் உள்ளன.
சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எம்.ஏ., எம்எஸ்.சி., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். படித்தவர்களுக்கு இந்த பணி யிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க 16-5-2018-ந் தேதி கடைசி நாளாகும். இவை பற்றிய விவரங்களை http://www.ntpccareers.net/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.