தமிழக வருவாய் துறை அலுவலகத்தில் ரூ.35,100/-ஊதியத்தில் வேலை

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருவள்ளூர் வருவாய் துறை கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் படி, இந்த தமிழக அரசு பணிக்கு 145 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 17.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வருவாய் துறை வயது வரம்பு:

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்ட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

கிராம உதவியாளர் – ரூ.11,100 to ரூ.35,100/-

கிராம உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்/ வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் தபால்/ நேரடியாக 17.02.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf