'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

‘டிஜிட்டல்’ கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு
சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், ‘டிஜிட்டல்’ கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், ‘டிஜிட்டல்’ கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக, ‘ஆன்லைன்’ சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்றஉயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன.

இந்நிலையில், ‘மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், டிஜிட்டல் கல்வி திட்டத்தை, கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும்’ என, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஜூலை, 27ல், மத்திய மனிதள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.