வாயுபிடியால் ஏற்பட்ட இடுப்பு வலி நீங்க..

நல்லெண்ணெய்யை இருப்பு கடாயில் சிறிது ஊற்றி சூடாக்கவும், சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை மட்டும் வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும் 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். வலி அதிகமாக இருந்தால் இரவு தேய்த்து காலை வெந்நீரில் குளிக்கலாம். இவ்விதம் செய்து வந்தால் இடுப்பு வலி குணமாகும்.


இடுப்பு வலி உள்ள நாட்களில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை அவித்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
பச்சை உருளைக் கிழங்கை அரைத்து இடுப்பு வலிக்கு பற்று போடலாம். இடுப்பு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.