ரூ 2,80,000 ஊதியத்தில் தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தில் (NCRTC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Group General Manager, General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு :

NCRTC கழகத்தில் Group General Manager, General Manager பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 04.06.2021 தேதியில் அதிகபட்சம் 50-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Electrical அல்லது அதற்கு இணைய பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணி கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN252021GGMGMElect.pdf