ஆதார் அட்டை திருத்தத்தில் இனி தொல்லையில்லை !!!! வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கான நற்செய்தி !!!!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல காரணங்களுக்காக அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆதார் ஒரு அறிவிப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இப்போது அது பல முக்கிய பணிகளுக்குத் தேவைப்படுகின்றது. ஆகையால், உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் முற்றிலும் சரியானவையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிறந்த நாள், பெயர், முகவரி போன்றவற்றை சரியாக நிரப்புவது அவசியம்.

இல்லையெனில் உங்கள் ஆதார் தொடர்பான பல வேலைகள் சிக்கிக்கொள்ளக்கூடும்.

ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. வாடகை வீடுகளில் இருப்பவர்களின் இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையை விநியோகிக்கும் தனிநபர் தகவல் ஆணையம் ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். முன்னர் ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

முதலில், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in/ க்கு செல்லவும். இங்கே Address Request (Online)ஐ கிளிக் செய்யவும். இதைச் செய்தபின் புதிய விண்டோ திறக்கும். Update Address என்ற ஆப்ஷனை இங்கே கிளிக் செய்யவும். பின்னர் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு, அங்கு கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நிரப்பவும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, வாடகை ஒப்பந்தத்தின் PDF நகல் பதிவேற்றப்பட வேண்டும்.

மேலும் செயலாக்கிய பிறகு, உங்கள் மொபைலில் OTP வரும். OTP ஐ நிரப்பிய பின், Submit பொத்தானை அழுத்தவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் கோரிக்கை நீங்கி, சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ஆதாரில் முகவரி மாறும். இந்த செயல்பாட்டில் உங்களுக்கு வாடகை ஒப்பந்தம் (Rent Agreement) தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒப்பந்தத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தின் போது, ​​வாடகை ஒப்பந்தத்தை (Rent Agreement) ஸ்கேன் செய்து அதன் PDF நகலை பதிவேற்ற வேண்டும்