மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளை

மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அலுவலக பணியிடங்களில் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், அதிகாரி பணியிடங்களில் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு […]

See More
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (ஜூன் 2018) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை […]

See More
புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை

புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி பபாசி அமைப்பு அறிவிப்பு

புத்தக தினம் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் எஸ். வயிரவன், செயலாளர் அரு. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் […]

See More
காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் […]

See More
பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை […]

See More
குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் இணையதளத்தில் மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2ஏ-வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வசதி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 4-ந் தேதிக்குள் தங்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான […]

See More
TNPSC 2018 இணைய வழியில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு

TNPSC 2018 இணைய வழியில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு! TNPSC.GOV.IN

TNPSC Certificate Verification 2018 – Document Upload-Instructions 2018

See More
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு | அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வு எழுதுபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது. […]

See More
ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி ஓய்வூதிய விதிகளில்

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் […]

See More
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் உள்ளது என்று பதிவாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.எம்.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக்குழு இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்கி […]

See More