மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மருந்து தயாரிக்கும் உதவியாளர் (மருந்து செய் உடனாளர்) பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணியிடத்துக்கு 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆதிதிராவிடர், அருந்ததியர் வகுப்பினருக்கான அதிகபட்ச வயது 35. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் – பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச வயது 3. பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவினர் – பெண்களுக்கு அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ.16 ஆயிரத்து 600. விவரங்களுக்கு, கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரியில் அணுகலாம்.

விண்ணப்பம் ஏப்.16 முதல் 20-ம் தேதி வரை வழங்கப்படும். ஏப்.27 விண்ணப்பிக்க கடைசி நாள்.