ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தடயஅறிவி யல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் மே 6-ம் தேதி (ஞாயிறு) காலை நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு சரி யான முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.net இந்த இணையதள முகவரிகளில் அனுமதிச் சீட்டை பதி விறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.