தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோடைகால

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோடைகால இன்டர்ன்ஷிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு தகவல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோடைகால
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்ச கம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம், தூய்மை இந்தியா கோடைக்காலப் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி நடப்பாண்டுக் கான பயிற்சி மே 1-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கோடைகால பயிற்சி யில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் www.sbsi.mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இன்டர்ன்ஷிப் குறித்து கூடுதல் விவரங்களையும் இந்த இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.பதிவு செய்ய மே 15-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ், பயிற்சிக் காலத்தில் குறைந்த பட்சம் 100 மணி நேரம் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும். கிராமங்களில் தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு 100 மணி நேரத்தை நிறைவு செய்யும் மாணவர்கள் அனைவருக்கும் ‘தூய்மை இந்தியா’ சான்றிதழ் வழங்கப்படும்.

சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரத்யேகமாக அனுமதித்துள்ள இரண்டு பாடத்திட்டப் புள்ளிகள் (Curriculum credits) அளிக்கப் படும்.

மேலும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவி லும் விருதுகள் வழங்கப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu