தொலைதூரக் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூரக் கல்வியில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர ஜுன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழக மான இக்னோ, தொலைதூரக் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ், இளங்கலை பட்டப் படிப்புக்கான முன்தயாரிப்பு படிப்பு ஆகியவற்றுக்கு ஜூலை பருவத்துக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கையை தற்போது தொடங்கியுள்ளது.

6 மாத காலம் கொண்ட முன் தயாரிப்பு படிப்பில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடிக்காத, 18 வயது நிரம்பியவர்கள் சேரலாம்.

அவர்கள் இந்தப் படிப்பை முடித்த பிறகு, இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் ஊட்டச்சத்து, தொடர்கல்வி, கல்வி, சட்டம், கணினி அறிவியல், சுற்றுலா, தொடர்புகொள்ளும் திறன், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல், விரிவாக்கக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

6 மாதம் காலம் கொண்ட சான்றிதழ் படிப்புகள் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும். மேற்குறிப்பிட்ட படிப்பு களுக்கு https://onlineadmission. ignou.ac.in/admission என்ற இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஜுன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.