‘சிம் கார்டு’ பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை மத்திய அரசு விளக்கம்

‘சிம் கார்டு’ பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை மத்திய அரசு விளக்கம்

‘சிம் கார்டு’ பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை மத்திய அரசு விளக்கம்

அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், சலுகைகளை பெறுவதற்கும் ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் வங்கி கணக்கு உள்ளிட்ட சேவைகளுடனும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தகவல் வெளியானது.

ஆனால் ஆதார் விவகாரத்தில் இறுதி உத்தரவு வரும்வரை சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருந்தது.

ஆயினும் பல இடங்களில் சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக பெறப்பட்டது. இதனால் ஆதார் இல்லாதவர்கள் சிம் கார்டு பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை நிரூபிக்கும் வகையிலான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்டு போன்ற பிற அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் கார்டு பெற்றுக் கொள்ளலாம் என தொலைத்தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியுள்ளார். இதை டெலிகாம் நிறுவனங்கள் உடனடியாக பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.