பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வழக்கு தற்போதைய நிலையே தொடர உத்தரவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வழக்கு தற்போதைய நிலையே தொடர உத்தரவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வழக்கு தற்போதைய நிலையே தொடர உத்தரவு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்.16-ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் 1,33,567 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி விரிவுரையாளர் தேர்வுக்கான தேர்வை ரத்து செய்து பிப்.9-ல் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கையை சேர்ந்த இளமதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களில் 200 பேரின் தேர்வு தாள் மதிப்பீடு செய்ததில்தான் முறைகேடு நடைபெற்றுள்ளது.

தேர்வின்போது எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இதனால் அந்த 200 தேர்வு தட்தாள்களை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

அதை செய்யாமல் மொத்த தேர்வையும் ரத்து செய்வது தவறு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகவில்லை, தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை, விடைத்தாள் மதிப்பீட்டில்தான் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்றதற்காக மொத்த தேர்வையும் ரத்து செய்வதை ஏற்க முடியாது” என்று கூறி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பிறப்பித்த உத்தரவை பிப். 22-ல் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், மொத்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் தேர்வு நடத்த அனுமதி வழங்கக்கோரியும் அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், ஏ.எம்.பஷீர் அகமது கொண்ட விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் வாதிடும்போது, “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்வுத் தாள் மதிப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், முகமது இம்ரன் ஆகியோர் வாதிடும்போது, “விடைத்தாள் திருத் தம் செய்ததில் மட்டுமே முறை கேடு நடைபெற்றுள்ளது.

இதற் காக மொத்த தேர்வையும் ரத்து செய்வது தவறு. மீண்டும் தேர்வு எழுதும்போது வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து வழக்கில் தற்போதைய நிலை (புதிதாக தேர்வு நடத்தவும் முடியாது, ஏற்கெனவே நடைபெற்ற தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யவும் முடியாது) தொடர வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்த னர்.