TNPSC - Certificate Verification and Counselling for the post included

TNPSC – Certificate Verification and Counselling for the post included in Group – IV Services ( Phase – IV)

TNPSC - Certificate Verification and Counselling for the post included
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 09.08.2016 had invited applications from candidates for appointment by direct recruitment to the post of Junior Assistant/Field Surveyor/Draftsman and Typist included in Group IV Services for the year 2015-2016.

The Written Examination was held on 06.11.2016 and results were published on 21.02.2017. To fill up 6 vacancies in the post of Junior Assistant and 2 vacancies in the post of Typist , IV phase of Certificate verification /Counselling is scheduled on 09.05.2018 at the O/o the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai-600 003.

Candidates are informed individually by speed post/SMS/ E-mail and about the date and time of Certificate verification / Counselling. Candidates are admitted to the Certificate verification/Counselling at the ratio of 1:5 based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. Hence, mere calling for Certificate verification / Counselling itself will not confer him/her to claim any right for this post.

Candidates who do not appear for Certificate verification / Counselling on the date and time allotted to them will not be given any further chance to appear for the same.

| தொகுதி நான்கு 2015-16-ல் அடங்கிய இளநிலை உதவியாளர்/ வரைவாளர்/ நில அளவர் / தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 09.08.2016 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இப்பதவிகளுக் கான எழுத்துத் தேர்வு கடந்த 06.11.2016 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 21.02.2017 அன்று வெளியிடப்பட்டது.

இத்தெரிவு தொடர்பான இளநிலை உதவியாளர் பதவிக்கான 6 காலிப்பணியிடங்கள் மற்றும் தட்டச்சர் பதவிக்கான 2 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 09.05.2018 அன்று நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு சென்னை – 600 003, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல், SMS மற்றும் E-mail மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினிவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனவே சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்/செயலாளர்(பொ) நாள்: 02.05.2018 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்