TNPSC - Group - IIA (Non-Interview posts) Online Certificate upload

TNPSC – Group – IIA (Non-Interview posts) Online Certificate upload

TNPSC - Group - IIA (Non-Interview posts) Online Certificate upload

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA) (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 04.05.2018 மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. ரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.