காலம் 09.05.2018 வரை நீட்டிப்பு

TNPSC : குருப் 2ஏ ஆன்லைன் வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு காலம் 09.05.2018 வரை நீட்டிப்பு

காலம் 09.05.2018 வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA) (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 04.05.2018 மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படிருந்தன.

இதுவரை மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மேலும் கூடுதல் அவகாசமாக நாள் 09.05.2018 மாலை 5.30 மணிவரை வழங்கப்படுகிறது.

சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இத்தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதற்குமேல் கூடுதல் அவகாசம் அளிக்கபடமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. ரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.