பாடப் புத்தகங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்

பாடப் புத்தகங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்.

பாடப் புத்தகங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள்.
மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல்.

அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள்.

தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள்.
கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி.

கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை ‘கியூஆர் கோடு’ மூலம் அணுகும் வசதி.

கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல்.
பாடப் பொருள் தொடர்பான  கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி.
சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து.

பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல்.

பன்முக தெரிவு வினா, எண்ணி யல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு.

தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல்.

மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி.

முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை.