திருவொற்றியூர் அரசு நூலகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்

திருவொற்றியூர் அரசு நூலகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்

திருவொற்றியூர் அரசு நூலகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்திருவொற்றியூரில் ரூ.1 கோடி செலவில் அரசு நூலகம் கட்டப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக வாசகர்களை கொண்ட இந்த நூலகத்தில் டிஜிட்டல் வசதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் இந்த நூலகத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையனிடம் நூலகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைத்து தரவேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் மற்றும் வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அரசு சார்பில் வாரத்தில் ஒரு நாள் போட்டி தேர்வு பயிற்சி அளிக்க அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று அரசு நூலகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் என்.துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

பயிற்சி மையத்தை அம்பத்தூர் ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், தாசில்தார் ராஜ்குமார், புரவலர் வரதராஜன், நூலகர் பேனிக்பாண்டியன், அம்பிகை தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசகர் வட்டம் சார்பில் மற்ற நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.