அணுமின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

அணுமின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

அணுமின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

தேசிய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் நர்ஸ் மற்றும் டெக்னீசியன் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 248 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒரு அறிவிப்பின்படி ஸ்டிபென்டரி டிரெயினி/டெக்னீசியன் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டன்ட் போன்ற பணிக்கு 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் பிளாண்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், டிராப்ட்ஸ்மேன், பிளம்பர் போன்ற பிரிவில் டெக்னீசியன் பணியிடங்கள் உள்ளன.

பிளஸ்-2 படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிரிவு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மற்றொரு அறிவிப்பின்படி நர்ஸ், எக்ஸ்ரே டெக்னீசியன், ஆபரேசன் தியேட்டர் அசிஸ்டன்ட் மற்றும் அசிஸ்டன்ட் , ஸ்டெனோ போன்ற பணியிடங்களுக்கு 69 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அசிஸ்டன்ட் பணிக்கு மட்டும் 47 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. டிப்ளமோ நர்சிங், பட்டப்படிப்பு மற்றும் ஸ்டெனோகிராபி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 24-5-2018-ந் தேதியாகும். இவை பற்றிய விவரங்களை http://www.npcil.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.