உர நிறுவனத்தில் பணி

உர நிறுவனத்தில் பணி

உர நிறுவனத்தில் பணி

தேசிய உர நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது சுருக்கமாக (RFCL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட், அசிஸ்டன்ட் மேனேஜர், டெபுடி மேனேஜர் மற்றும் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் கெமிஸட், மெட்டீரியல்ஸ் ஆபீஸர், அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர் தரத்திலான பணிகளுக்கு அதிகமான காலியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 30-4-2018-ந் தேதியில் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது.

குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (என்ஜினீயரிங்), எம்.பி.ஏ., முதுநிலை டிப்ளமோ, சி.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளை படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.700 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சில பணிகளுக்கு 1000 கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.