மத்திய அரசு துறைகளின் மருத்துவ சேவை பணிகளுக்கான

மத்திய அரசு துறைகளின் மருத்துவ சேவை பணிகளுக்கான தேர்வு 454 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

மத்திய அரசு துறைகளின் மருத்துவ சேவை பணிகளுக்கான
மத்திய அரசு துறைகளில் மருத்துவ சேவை பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை யூ.பி.எஸ்.சி. அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 454 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களையும், இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்கள் மூலம் நிரப்பி வருகிறது.

தற்போது அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது.

‘காம்பைன்டு மெடிக்கல் சர்வீசஸ் எக்ஸாம் 2018’ எனப்படும் இந்த தேர்வின் மூலம், மொத்தம் 454 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ரெயில்வே துறையில் அசிஸ்டன்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 300 இடங்களும், ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் அசிஸ்டன்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும், மத்திய சுகாதாரத்துறையில் ஜூனியர் ஸ்கேல் அதிகாரி பணிக்கு 138 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- வயது வரம்பு: 1-8-2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1986-ந் தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.பி.எஸ். இறுதி பருவத் தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். உடல்தகுதி: மருத்துவ சேவைப் பணிகளில் சேருவதற்கான குறிப்பிட்ட உடல் தகுதிகளையும் விண்ணப்பதாரர் கொண்டிருக்க வேண்டும். கட்டணம் : பெண் விண்ணப்ப தாரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரி வினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.upsconline.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

முன்னதாக புகைப் படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்வதுடன், தேவையான சான்றுகளை நகல் எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-5-2018 விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.