பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி யிடங்களுக்கு 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி.

வெளிநாடுகளிலும் கிளை களைக் கொண்ட பிரபல வங்கியான இதில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஸ்கேல்-2 தரத்திலான பணிகளுக்கு 40 இடங்களும், ஸ்கேல் 3 தரத்திலான பணிகளுக்கு 221 இடங்களும், ஸ்கேல் 4 தரத்திலான பணி களுக்கு 100 இடங்களும் உள்ளன.

பிரிவு வாரியான பணியிடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இனி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்… வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில், குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகி, அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., முதுநிலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

17-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.bankofbaroda.co.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.