தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது அமைச்சர்

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது அமைச்சர் முன்னிலையில் நடந்த விழாவில் நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது அமைச்சர்
தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது என்று அமைச்சர் முன்னிலையில் நடந்த விழாவில் நீதிபதி கிருபாகரன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்கெட்டு போய் விட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் இதழ் வாசித்து சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான சான்றிதழை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பேசிய நீதிபதி கிருபாகரன் கல்வித்துறை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:- இன்றைக்கு தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது.

இதற்கு சிலரின் நடவடிக்கை தான் காரணம். இதை நினைவில் கொள்ள வேண்டும்.

தவறு செய்பவர்களை தயவு செய்து தாங்கி பிடிக்காதீர்கள்.

தவறு செய்பவர்களை தாங்கி பிடித்தால் நீங்கள் செய்யும் வேலைக்கு செய்கின்ற துரோகம். கல்விக்கு செய்யும் துரோகம். அது நான் செய்தாலும் துரோகம் தான். தவறாக தீர்ப்பை எழுதினால் என்னுடைய கை, கால்கள் ஒழுங்கா இருக்குமா?, வருங்கால சந்ததிகள் நன்றாக இருக்குமா?. நிச்சயமாக இருக்காது. தவறாக நான் தீர்ப்பு எழுதினால் என்னுடைய கை கால்கள் விளங்காமல் போய் விடும்.

அதேபோன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாவிட்டால் இதே நிலை தான் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார். தள்ளுமுள்ளு முன்னதாக நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கால தாமதமாக வந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.