ஆய்வக உதவியாளர் பதவிக்கு 72,000 பேர் போட்டி

ஆய்வக உதவியாளர் பதவிக்கு 72,000 பேர் போட்டி

ஆய்வக உதவியாளர் பதவிக்கு 72,000 பேர் போட்டி

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

காலையில் அறிவியல் தேர்வும், பிற்பகலில் பொது அறிவு தேர்வும் நடைபெற்றன.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தேர்வை 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில் 54 சதவீதம் பேர் கலந்துகொண்டதாகவும், 46 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.