இந்தியில் வினாத்தாள் கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சி

இந்தியில் வினாத்தாள் கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சி

இந்தியில் வினாத்தாள் கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சி

சேலம் மெய்யனூரில் உள்ள வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 780 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதும் வகையில் வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட சில அறைகளில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் தமிழுக்கு பதிலாக இந்தி, ஆங்கிலம் மொழியில் கேள்விகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள், தேர்வு மைய அதிகாரிகளிடம் தமிழில் வினாத்தாள் கேட்டு முறையிட்டனர்.

அப்போது, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மாறி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருகில் இருந்த தேர்வு மையங்களில் இருந்து தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் இருந்த வினாத்தாள் வரவழைக்கப்பட்டு அந்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து காலை 11.30 மணிக்கு சிலரும், பிற்பகலில் சிலரும் தேர்வு எழுத தொடங்கினர்.