ஜாக்டோ - ஜியோ கோட்டை முற்றுகை போராட்டம்

ஜாக்டோ – ஜியோ கோட்டை முற்றுகை போராட்டம் | திட்டமிட்டபடி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகின்றனர்.முன்னெச்சரிக்கையாக 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது

ஜாக்டோ - ஜியோ கோட்டை முற்றுகை போராட்டம்

இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250-க்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வான ஜாக்டோ – ஜியோ போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று (8-ம் தேதி) சென்னையில் கோட்டையை முற்றுகையிடப் போவ தாக அறிவித்திருந்தனர்.

இதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து நேற்று முன்தினம் இரவு முதல் போலீஸார் கைது நடவடிக்கையை தொடங்கினர்.

இதன்படி, திருவள்ளூரில் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல நாமக்கல், ராசிபுரம், பாளையங்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

EDUCATION WEBSITE IN TAMIL NADU