டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறை

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறை

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை ஜெ.கு.லிஸ்பன் குமார் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு தேர்விலும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் முறை அப்ஜெக்டிவ் முறை என்பது ஒரு வினாவுக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரே தேர்வாக இருந்தாலும் முதன்மைத்தேர்வுடன் கூடிய தேர்வாக இருந்தால் முதல் நிலைத்தேர்விலும் இதே அப்ஜெக்டிவ் முறைதான் கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும் மதிப்பெண் ஏதும் கழிக்கப்படு வதில்லை. அதேநேரத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் (Negative Mark) வழங்கப்படும்.

ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் மதிப்பெண் கழிக்கப்படும். அதாவது ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும் பட்சத்தில் 4 கேள்விகளுக்கு தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் பறிபோய்விடும். இந்த நிலையில், அண்மையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள சிவில் நீதிபதி தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் அரை மதிப்பெண் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணைய கொள்கை முடிவு மைனஸ் மதிப்பெண் முறை சிவில் நீதிபதி தேர்வுக்கு மட்டுமா அல்லது அடுத்துவரும் இதர தேர்வுகளுக்கும் அது நீட்டிக்கப் படுமோ? என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்துவரும் இளைஞர்களின் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதனிடம் கேட்டபோது கூறியதாவது: “சிவில் நீதிபதி தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும், அது இதர தேர்வுகளுக்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதும் தேர்வாணையத்தின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விஷயம்” என்றார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்து சென்னை சைதாப்பேட்டை வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப் பெண் அளிக்கும் முறை வரவேற்கத்தக்கது.

விடை தெரிந்தால் மட்டுமே விடையளிப்பார்கள். தெரியாத கேள்வி களுக்குப் பதில் அளிக்காமல் விட்டுவிடுவர். தேர்ச்சி பெறக்கூடிய சூழல் ஆனால், தற்போதைய முறையில், ஒரு கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும்கூட இஷ்டம்போல் ஏதாவது ஒரு விடையைத் தேர்வுசெய்து அது சரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விடையளிப்பவர்களும் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழல் இருக்கிறது. மைனஸ் மதிப்பெண் முறை இருந்தால் நல்ல முறையில் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிபெற்ற முடியும்” என்றார்.