வியூகம் அமைத்து போராட்டத்துக்கு வந்தோம்

வியூகம் அமைத்து போராட்டத்துக்கு வந்தோம்

வியூகம் அமைத்து போராட்டத்துக்கு வந்தோம்

கோட்டை முற்றுகை போராட்டத்துக்கு வருகை தந்த கீர்த்தனா என்ற அரசு ஊழியர் கூறும்போது, “நாங்கள் திருப்பூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு ரெயிலில் ஒரு குழுவாக வந்தோம்.

போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களின் சோதனையில் இருந்து தப்பிக்க நாங்களும் வியூகம் அமைத்து தனித்தனியாக சிதறி வெளியில் வந்து பின்னர் ஒன்று சேர்ந்து போராட்ட களத்துக்கு வந்தோம்” என்று தெரிவித்தார்.

இதே போன்று கடலூரில் இருந்து வருகை தந்த ஆசிரியர் அம்பேத்கர் கூறும்போது, “பஸ், வேன்களில் வருபவர்களை போலீசார் கடுமையாக சோதித்த பின்னரே அனுப்புகின்றனர்.

இதனால், பஸ், வேனில் வரமுடியவில்லை. ஆனால், நான் அரசியல் பிரமுகர் ஒருவரின் காரில் வந்தேன். அரசியல் பிரமுகர் கார் என்பதால் எந்த சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், ஆசிரியர்களுக்கு விடுமுறை நேரம் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் 2 நாட்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டனர்.

அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்” என்றார்.