ஊதிய முரண்பாடுகளை களைய கோரி பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க நிர்வாகிகள் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தினர்.

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராபர்ட் கூறியதாவது: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், கோரிக்கையை கோப்புகளுடன் இணைத்து ஒருநபர் ஊதியக்குழுவிடம் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.

கல்வித்துறை அமைச்சரும், பேச்சுவார்த்தையின்போது உத்திரவாதம் அளித்ததால், போராட்டத்தை கைவிட்டோம்.

தற்போது ஒருநபர் ஊதியக்குழுவுக்கு, அரசு எங்கள் கோப்புகளை அனுப்பியுள்ளது. அதற்கான நகல்களையும் எங்களிடம் அளித்துள்ளனர்.

அரசு கூறிய வார்த்தையை நிறைவேற்றியுள்ளது.

ஒருநபர் குழுவை சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.