தமிழகம், புதுச்சேரியில் கனமழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் கனமழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் கனமழை வாய்ப்பு

கேரளப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், பல பகுதிகளிலும் கடும் வெப்பம் தாக்கி வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக பரவலாக மழையும் பெய்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், ‘அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘கேரளாவை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 10-ம் தேதி (நேற்று) வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் சராசரியாக 93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் பெய்த மழையின் சராசரி 81 மி.மீ. ஆகும்.

வழக்கத்தைவிட இந்த ஆண்டில் 14 சதவீதம் அதிகமாக கோடைமழை பெய்துள்ளது’’ என்றார்.