சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முன்தினம் யில் போராட்டம் நடைபெற்றது.

போலீஸாரின் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் போராட்டம் மற்றும் மறியல் செய்தனர்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர்களின் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக 7,600 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அன்று இரவே விடுதலை செய்யப்பட்னர்.

ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் மீது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி கூடுதல், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் போராட்டத்தில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.