இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு

இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு

இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கியது.

முதல் நாளிலேயே 7,420 மாணவ-மாணவி கள் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.

7-வது நாளான நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி, 4035 பேர் ஆன்லைனில் பதிவுசெய்தனர்.

அவர்களில் 3,468 பேர் வீடுகளில் இருந்தவாறும், எஞ்சிய 567 பேர் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.

பதிவு தொடங்கிய கடந்த ஒரு வார காலத்தில் 36,559 பேர் பதிவுசெய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.