பள்ளி வாகனங்களில் மே.15 முதல் ஆய்வு

பள்ளி வாகனங்களில் மே.15 முதல் ஆய்வு

பள்ளி வாகனங்களில் மே.15 முதல் ஆய்வு

மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வரு கிறோம்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் 3000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங் கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளோம்.

இதில், ஏதேனும் குறை பாடு இருந்தால் வாகனங்களின் உரிமம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.