ஐஏஎஸ் பயிற்சிக்கு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் இலவச மாதிரி வகுப்பு

ஐஏஎஸ் பயிற்சிக்கு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் இலவச மாதிரி வகுப்பு

ஐஏஎஸ் பயிற்சிக்கு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் இலவச மாதிரி வகுப்பு

ஐஏஎஸ் பயிற்சிக்கு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் இலவச மாதிரி வகுப்பு இன்றும், நாளையும் நடக்கிறது ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் சிறந்த நிறுவனமான கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, அண்ணாநகரில் செயல்பட்டு வருகிறது.

இம் மையம் 159 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கிய பெருமை பெற்றுள்ளது. 2018-19-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் மே 27 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன.

இதற்காக இன்றும், நாளையும் (மே 12, 13) இலவச மாதிரி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வகுப்பில் ஐஏஎஸ் தேர்வில் எளிதாக வெற்றி அடையும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும் உயர் மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படும்.

மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள், பின்பற்ற வேண்டிய கையேடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 9444227273 என்ற அலைபேசி எண்ணுக்கு தங்கள் பெயர், கல்வித்தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை எஸ்எம்எஸ் அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இம் மையத்தின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறினார்.