குழந்தை கடத்தல் பற்றி வீண் வதந்திகளை பரப்பினால் குண்டர்

குழந்தை கடத்தல் பற்றி வீண் வதந்திகளை பரப்பினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் பற்றி வீண் வதந்திகளை பரப்பினால் குண்டர்

குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதால், அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கொல்லப்படும் சம்பவங்கள் அண்மை யில் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குழந்தை கடத்தல் தொடர்பாக யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாறாக வாட்ஸ்அப் மூலம் தவறான வதந்திகளைப் பரப்பி யார் மீதாவது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் கூட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.