மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தொழில் பயிற்சி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு, குறுகிய கால இலவசப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறன் அற்றவர்களுக்கு கைபேசி பழுது பார்த்தல், தையல் கலை, வீட்டு உபகரணங்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், புக் பைண்டிங், சில்லறை விற்பனைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். குறைந்த அளவிலான இடங்களே உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் வரும் 14-ம் தேதிக்கு முன்பாக தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு மையத்தை அணுகலாம்.