அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 117 மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 117 மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 117 மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்புமருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இதில் நிரம்பாத தமிழக அரசு இடங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,646 பட்ட மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள், அதாவது 823 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டன.

கலந்தாய்வு முடிவில் 117 இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 335 இடங்கள் தமிழகத்துக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.