ஜூலை 9-ம் தேதிக்குள் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற

ஜூலை 9-ம் தேதிக்குள் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற்ற வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 9-ம் தேதிக்குள் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 பேராசிரியர் பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர உத்தர விட வேண்டும் என்றும் அந்த வழக்கு மனுவில் கோரப்பட்டி ருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழு அமைத்து, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிதாக விதிகளை உருவாக்க உத்தர விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ‘‘மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

2008-ல் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை 2 ஆக பிரித்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்தது.

அதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. ஆனால், கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப் பதாவது: பேராசிரியர்கள் பணி நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையிலான குழு ஆலோசனைப்படி நேர்மையாக நடத்த வேண்டும்.

மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூருக்கும் மாற்றுவது என்பது உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடந்து வரு கிறது.

நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் வரும் ஜூலை 9-ம் தேதிதான் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும்.

அந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பை டிஜிபியும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்களும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கள்உத்தரவிட்டனர்.