தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு அடிப்படை வசதிகள் உள்ளதா என விசாரணை

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள், அந்தந்த மாநில அரசின் கல்வித் துறையின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.

இந்த அங்கீகாரத்தின்படி, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய பாடத் திட்டத்தின்படி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளி களுக்கும் இது பொருந்தும். பாடத்திட்டத்தைப் பின்பற்றுவது, புத்தகங்களைத் தேர்வு செய்வது போன்ற விஷயங்களில் மட்டும் சிபிஎஸ்இ வாரியத்தின் உத்தரவுப்படி இப்பள்ளிகள் செயல் படும். ஆனால் தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரத்தைப் பெறாமல், சிபிஎஸ்இ யின் இணைப்புக் கடிதத்தை மட்டும் வைத்து, பள்ளிகளை நடத்துவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.

பல பள்ளிகள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத இடங்களைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

எனவே வரும் ஆண்டுகளில் இதுபோன்ற புகார் கள் வராமல் தடுக்க சிபிஎஸ்இ பள்ளிகள் மீது புதிய நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, நர்சரி பள்ளி கள் உட்பட தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில், வருவாய்த் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, தீயணைப்புத் துறை, மற்றும் சிஎம்டிஏ, டிடிசிபி ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வழங்குவர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசு வழிகாட்டுதல்படி தற்போது மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்றது வரு கிறது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 931 தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளில், அரசுத்துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த சில தினங்களாக தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக் கட்டிடங்கள் விதி களுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா, மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் சரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என கண்டறியப் பட்டு வருகிறது. ஆய்வு முடிவு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.