25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்ட அரசாணையை உறுதி செய்து, இடஒதுக்கிட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் ஆணையிட்டுள்ளது.25 வயது வரைதான் நீட் தேர்வு எழுதலாம் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு தேசிய அளவில் ‘நீட்’ தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

இதில் பொதுப் பிரிவினர் 25 வயது வரையிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவில் 30 வயது வரையிலும் தேர்வு எழுதலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 30 வயது வரை நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘‘பொதுப்பிரிவில் 25 வயது வரை, இடஒதுக்கீட்டுப் பிரிவில் 30 வயது வரை தேர்வை எழுதலாம் என்ற உத்தரவு சரியானதுதான்.

ஆனால், திறந்தவெளி பள்ளியில் பிளஸ் 2 படித்தவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற விதிக்கு தடை விதிக்கிறோம். திறந்தவெளி பள்ளியில் படித்த மாணவர்களையும் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.