CURRENT AFFAIRS - கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 - PART - 1

CURRENT AFFAIRS – கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 – PART – 1

 

CURRENT AFFAIRS - கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 - PART - 1இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்து முன்னாள் வீரர் மர்ஜினே மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். (மே 1)

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்டது. இதுதொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. (மே 2)

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதன்படி டன்னுக்கு ரூ. 55 நேரடியாக வழங்கப்படும். (மே 2)

இந்திய வங்கிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது. (மே 2)

உலகின் மிகவும் மாசடைந்த முதல் 20 நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல், உலக சுகாதார நிறுவன ஆய்வில் வெளியாகியிருக்கிறது. (மே 2)

தமிழகத்துக்கு காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த உத்தரவை மதிக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. (மே 3)
உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைத் தாக்கிய புழுதிப்புயலில் சிக்கி 97 பேர் இறந்தனர். (மே 3)

8 கோடியே 70 லட்சம் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடிய குற்றச்சாட்டுக்கு ஆளான சர்ச்சைக்குரிய கேம் பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. மூடலுக்கு முதல்கட்ட நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. (மே 3)

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை நிர்வகிக்கும் ஜி.எஸ்.டி.என். நிறுவனத்தை முழுக்க முழுக்க அரசு நிறுவனம் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (மே 4)

அதிவேக வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவை விஞ்சி இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்தது. (மே 4)

பாலியல் சர்ச்சையில் சுவீடிஸ் அகாடமி சிக்கி உள்ளதால் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கிடையாது. இது அடுத்த ஆண்டுடன் சேர்த்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. (மே 4)

புதுடெல்லியில் தேசிய சினிமா விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 12 விருதுகளை மட்டுமே வழங்கினார். மத்திய மந்திரிகள் கையில் விருது பெற விரும்பாமல் பெரும்பாலான கலைஞர்கள் விழாவைப் புறக்கணித்தனர். (மே 3)