CURRENT AFFAIRS - கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 - PART - 2

CURRENT AFFAIRS – கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 – PART – 2

CURRENT AFFAIRS - கடந்து வந்த பாதை ஏப்ரல் 28- மே 4 - PART - 2

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வு களின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது…

சீனாவின் வூகனில் இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் சந்திப்பில், இந்திய- சீன எல்லையில் அமைதியைப் பராமரிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். (ஏப்ரல் 28)

பாரத ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 249 கோடி டாலர் சரிந்து 42 ஆயிரத்து 359 கோடி டாலராக குறைந்தது. (ஏப்ரல் 28)

கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட உறுதி கொண்டு கூட்டறிக்கை வெளியிட்ட வட, தென்கொரியத் தலைவர் களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டுத் தெரிவித்தார். (ஏப்ரல் 28)

நடப்பு 2017- 2018 சந்தைப் பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்) நாட்டின் சர்க்கரை உற்பத்தி 3.15 கோடி டன்னாக உயரும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) மறுமதிப்பீடு செய்தது. (ஏப்ரல் 29)

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்தக் கடைகள் மூடப்பட்டன. (ஏப்ரல் 29)

ரஷியாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுப் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். (ஏப்ரல் 29)

சர்வதேச அளவில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி- மார்ச்) சூரியசக்தி மின் உற்பத்தித் துறையில் 200 கோடி டாலர் அளவுக்கு நிறுவன முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. (ஏப்ரல் 30)

காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். (ஏப்ரல் 30)

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவதை அனைத்து ஐகோர்ட்டுகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (மே 1)

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். (மே 1)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி (125 புள்ளிகள்) 4 புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் நீடித்தது. தென்ஆப்பிரிக்க அணி (112 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும் இருந்தன. (மே 1)