90-வது ஆண்டு விழா ‘டிஜிட்டல்’ முறையில் புத்தகங்கள் வெளியிட திட்டம்

90-வது ஆண்டு விழா: ‘டிஜிட்டல்’ முறையில் புத்தகங்கள் வெளியிட திட்டம் ‘லிப்கோ’ நிறுவனம் அறிவிப்பு

90-வது ஆண்டு விழா ‘டிஜிட்டல்’ முறையில் புத்தகங்கள் வெளியிட திட்டம்
90-வது ஆண்டு விழா: ‘டிஜிட்டல்’ முறையில் புத்தகங்கள் வெளியிட திட்டம் ‘லிப்கோ’ நிறுவனம் அறிவிப்பு | கிருஷ்ணசாமி சர்மாவால் 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தி லிட்டில் பிளவர் நிறுவனம்’(லிப்கோ) தனது 90-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் டி.என்.சி. விஜயசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழனால் தமிழ்நாட்டில் அகராதி வரிசைகளை முதன்முதலில் பதிப்பித்தது லிப்கோ நிறுவனம் தான். தமிழ் பாரம்பரியமும், கலாசாரமும் சிறப்புடன் விளங்க வேண்டும் என்பதால் தமிழ் சார்ந்த பண்பாட்டு நூல்கள், நாட்டு-இயற்கை மருத்துவம், சிற்பக்கலை, ஜோதிட சாஸ்திரம், பாரம்பரிய சமையல் குறிப்புகள் என பல துறைகளில் நூல்களை ‘லிப்கோ’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லிப்கோவின் ராமாயணமும், சுந்தரகாண்டமும், பாராயணம் செய்து பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை இன்றளவும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

அகராதி வரிசையில் 728 நூல்கள், தெய்வீக வரிசையில் 433 நூல்கள், இதரத்துறைகளில் 200 நூல்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன.

‘லிப்கோ’ தனது ஆக்கப்பூர்வமான செயலாக வரும் காலத்தில் பெரிய அகராதியை இருபாகமாக பிரித்து 50 ஆயிரம் சொற்களுக்கு மேல் வரும்படி வெளியிட உள்ளது.

ராமாயணப் பிரதி வாங்குபவர்களுக்கு சிக்கு பலகை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

‘லிப்கோ பரம்பரா’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாவட்டம் தோறும் கிளை அலுவலகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த புத்தங்களை ‘டிஜிட்டல்’ முறையில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.