மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாத

மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை…

மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாத

மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் முன்னதாக தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களை குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டி சூழல்களை தவிர்க்கும் வகையிலும் 2016-17-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிடலாம் எனக்கருதி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரையாக வழங்கி அரசாணையை பின்பற்றுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசாணையின் நோக்கத்திற்கு மாறுபட்ட வகையில் ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் ஒளிப்படம் தாங்கிய விளம்பர பிரசுரங்களை வெளியிடுதல், பதாகைகள் அமைத்தல், நாளிதழ் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை மாணவர்களின் நலன் கருதி தவிர்க்க அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தக்க அறிவுரைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கிட வேண்டும்.

அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விவரத்தினை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD