பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 14 முதல் விண்ணப்ப விநியோகம்

பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: 14 முதல் விண்ணப்ப விநியோகம்

பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 14 முதல் விண்ணப்ப விநியோகம்பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 14 -ஆம் தேதி முதல் ஜூன் 1 -ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 1 கடைசி நாளாகும்.

இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 47 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப்படிப்புக்கான முதலாம் ஆண்டு சேர்க்கை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓராண்டு ஒப்பனைக் கலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட உள்ளது.

இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.150 ஆகும்.