பொது அறிவு - இந்தியன் ரெயில்வே

பொது அறிவு – இந்தியன் ரெயில்வே

பொது அறிவு - இந்தியன் ரெயில்வே

இந்தியாவின் முதல் ரெயில் சேவை 1853-ல் தொடங்கியது.

இந்தியாவில் முதல் மின்சார ரெயில் 1925-ல் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சுரங்க மெட்ரோ ரெயில் 1984-85-ல் மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பறக்கும் ரெயில் 1995-ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

பறக்கும் ரெயில் எம்.ஆர்.டி.எஸ். (MRTS) என அழைக்கப்படுகிறது. இதற்கு Mass Rapid Transit System என்பது விரிவு ஆகும்.

ரெயில்வே பட்ஜெட். அக்வொர்த் கமிட்டியின் பரிந்துரைப்படி பொதுபட்ஜெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. 1921 முதல் தனி பட்ஜெட்டாக இருந்தது. 2016 முதல் இந்த பட்ஜெட் மீண்டும் பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

கொங்கன் ரெயில்வே சேவை 1998-ல் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா – கர்நாடகம் வரை இந்த ரெயில்சேவை நடைபெறுகிறது.

1991-ல் இந்திய ரெயில்வே ஜீவன் ரேகா ரெயில் மருத்துவமனையை தொடங்கியது. இது லைப்லைன் எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.