ஐ.ஐ.டி.யில் வேலை

ஐ.ஐ.டி.யில் வேலை

ஐ.ஐ.டி.யில் வேலை

இந்திய தொழில்நுட்ப மையம் எனப்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தின் ரூர்கி கிளையில் உதவி எக்சிகியூட்டிவ், சீனியர் மெடிக்கல் ஆபீசர் மற்றும் மெடிக்கல் ஆபீசர், டெக்னிக்கல் ஆபீசர், ரிஜிஸ்திரார், உதவி நூலகர் போன்ற பணிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பிஎச்.டி., முதுநிலை குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்புடன் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எம்.பி.பி.எஸ்., எம்.டி.எம்.எஸ். மருத்துவ படிப்பு படித்தவர்களும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிடம், அதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம்.

அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 31-5-2018-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களை https://www.iitr.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.